search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி திரும்பினார்"

    இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி தனது பயணத்தை நிறைவு செய்து இன்றுஇரவு டெல்லி திரும்பினார். #PMModi
    புதுடெல்லி:

    ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். 

    சிங்கப்பூர் விமான நிலையம் சென்ற மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, 
    13-வது கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்ற முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    பிராந்திய பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடி, சிங்கப்பூர் நிதி நிறுவனமான ஃபின்டெக் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

    இந்நிலையில், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி தனது பயணத்தை நிறைவு செய்து இன்றுஇரவு டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். #PMModi
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று இரவு சீனாவில் இருந்து டெல்லி திரும்பினார். #SCOsummit #PMModi
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் தான் முதல் முறையாக பங்கேற்றன.

    இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சிறப்பு உரையை நிகழ்த்தினார். மேலும், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இந்தியாவுடனான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இன்று நிறைவடைந்தது.

    இந்நிலையில், சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார். அங்கிருந்து விமானத்தில் வந்த மோடி இரவில் டெல்லி திரும்பினார். அவரை இந்திய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். #SCOsummit #PMModi
    நேபாளம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். #pmmodi #sushmaswaraj
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேபாளம் சென்றார். அங்கு சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து உ.பி.யின் அயோத்தி நகருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார். 
    மேலும் புதிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

    இதையடுத்து, இன்று முக்திநாத் ஆலயத்துக்குச் சென்ற அவர் முக்திநாதரை வணங்கினார். பிற்பகலில் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.

    அதன்பின்னர், நேபாளத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார். இன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லி திரும்பிய மோடியை மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #pmmodi #sushmaswaraj
    ×